விருதுநகர்; விருதுநகர் என்.ஜி.ஒ., காலனியில் செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ஜூன் 11 காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜை துவங்கி, மகா கணபதி மூலமந்திர பாராயணம் ஹோமம் நடந்தது. அதன் பின் காலை 6:30 மணிக்கு கோயில் கலசலங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:45 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.