புரி ஜெகந்நாதர் கோயிலில் அனைத்து வாயில்களும் பக்தர்களுக்கு திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2024 01:06
புவனேஸ்வர்: ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து வாயில்களும் பக்தர்கள் வசதிக்காக இன்று( ஜூன் 13) திறக்கப்பட்டது. ஒடிசா முதல்வராக பா.ஜ.வின் மோகன் சரண் மஜி நேற்று பதவியேற்றார். பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நேற்று மோகன் சரண் மஜி தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் பக்தர்கள் வசதிக்காக கோயிலில் உள்ள நான்கு வாயில்களையும் திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் தனது வாக்குறுதியை பா.ஜ., நிறைவேற்றி உள்ளது.
இதன்படி, இன்று( ஜூலை 13) முதல்வர் மோகன் சரண் மஜி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டது. பிறகு, அனைவரும் ஜெகநாதரை வழிபட்டனர். முன்னதாக அங்கு சிறப்பு பூஜை நடந்தது. புரி ஜெகந்நாதர் கோயிலில் மொத்தம் நான்கு கதவுகள் உள்ளன. கோவிட் பெருந்தொற்றின் போது 3 கதவுகளை, அப்போதைய நவீன் பட்நாயக் அரசு மூடியது. ஒரு வாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சிரமப்பட்டதால், அனைத்து கதவுகளையும் திறக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வந்தது. இதனை தேர்தல் வாக்குறுதியாகவும் அக்கட்சி அளித்து இருந்தது.