காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சுக்லபாளையம் கோவிந்தன் தெருவில், கங்கையம்மனுக்கு நடப்பு ஆண்டுக்கான கோடை உற்சவம் நேற்று முன்தினம் ஜலம் திரட்டுதலுடன் துவங்கியது. நேற்று, காலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பும் நடந்தது. இன்று, பிற்பகல் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தல் நிகழ்வு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை சுக்லபாளையம் இளைஞர் குழுவினர், கோவிந்தன் தெருவாசிகள் இணைந்து செய்திருந்தனர்.