பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
11:06
பொள்ளாச்சி; குண்டலப்பட்டி கூணம்மாள், எள்ளம்மாள், ஸ்ரீரங்கா பெருமாள், ஆத்திமரத்து கருப்பராயன், கன்னிமார் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்றுமுன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, கடம் யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள், கூணம்மாள், எல்லம்மாள், ஸ்ரீரங்கப்பெருமாள், ஆத்திமரத்து கருப்பராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி 13ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, 14ல், காலை, திருவிளக்கு பூஜை, விக்னேஸ்வர பூஜை, சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகளும், மாலையில், கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாகமும், இரவு, தீபாராதனை போன்றவை நடந்தன. நேற்றுமுன்தினம் 15ம் தேதி, காலை, சூர்ய பூஜை, தோரண பூஜை, வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாகம் நடந்தது. மாலை, மூன்றாம் கால யாகம் நடந்தது. இரவு, வேதபாராயணம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை, நான்காம் கால யாகமும், தொடர்ந்து, கோபுர விமானம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.