பதிவு செய்த நாள்
20
ஜூன்
2024
11:06
கூடலுார்; மசினகுடி அருகே உள்ள ஆனைகட்டி ஸ்ரீ மாசி கரியபண்ட் அய்யன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மசினகுடி அருகே உள்ள ஆனைகட்டி ஸ்ரீ மாசி கரியபண்ட் அய்யன் கோவில் திருவிழா இரு நாட்கள் நடந்தது. காலை குண்டத்துக்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி; பகல் 12:30 மணிக்கு சிறியூர் மாரியம்மன் அழைத்து வருதல்; பிற்பகல், 2:30 மணிக்கு ஸ்ரீ கொங்காளி அய்யனை அழைத்து வரும் நிகழ்ச்சியும்; மாலை 3:00 மணி முதல் 4:00 மணி முடிவெடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 9:00 மணி முதல் அய்யன் புலி மேல் பவனி வருதல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனிடையே, கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் ஆடிகொம்பை முதல் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் இருப்பதாலும், மாலை, 6:00 மணிக்கு மேல் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனை ஏற்க மறுத்த பக்தர்கள், வன ஊழியர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறியூர் செல்லும் அரசு பஸ்சை பிடித்தனர். போலீசார், பக்தர்களிடமிருந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் பஸ்சை விடுவித்தனர். தொடர்ந்து, மறுநாள் காலை 6:00 மணி முதல், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.