காரைக்கால் மாங்கனி திருவிழா; பிச்சாண்டவராக வந்த சிவன்.. மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2024 11:06
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. பழங்காலத்தில் சிவபக்தியான புனிதவதியாரை மணந்த பரமதத்தர் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் இரண்டில் ஒன்றை அடியார் வேடத்தில் வீட்டிற்கு வந்த சிவபெருமானுக்கு புனிதவதியார் உணவுடன் சேர்த்து படைத்தார். பின் வீட்டிற்கு வந்த கணவருக்கு மீதமிருந்த மாங்கனி ஒன்றை வழங்க அதன் சுவை அதிகமாக இருந்தால் மற்றொரு பழத்தை கேட்க செய்வதறியாது திகைத்த அம்மையார் இறைவனை வேண்டியதால் கையில் மாங்கனி கிடைத்தது. அதை கணவரிடம் வழங்கினார். முன்பு சாப்பிட்ட பழத்தின் சுவையை விட அதிகமாக இருந்ததால் பழம் குறித்து பரமதத்தர் விபரம் கேட்டார். அப்போது அம்மையார் சிவபெருமாள் வழங்கியது என கூற அதை ஏற்க மறுத்த பரதத்தர் மீண்டும் ஒரு பழம் வரவழைத்து கொடு என கேட்டார். அப்போது கணவன் முன் இறைவனை வேண்டி மீண்டும் ஒரு பழத்தை பெற்று கணவனிடம் காண்பித்தார். இதை பார்த்த பரமதத்தர் புனிதவதியார் நீ தெய்வ பிறவி என்று கூறி பிரிந்து மதுரை சென்று மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். கணவனை காண மதுரை சென்ற புனிதவதியாரை கண்ட பரமதத்தர் தனது இரண்டாவது மனைவி மகளுடன் காலில் விழுந்து வணங்கினார்.பின் கணவனுக்காக ஏந்திய உடலை வெறுத்து சிவனிடம் வேண்டி பேய் உருவம் பெற்றார். அம்மையார் பின் சிவபெருமாள் உள்ள கையிலாயத்திற்கு சென்றார். புனிதமிக்க கைலாயத்தில் தன் பாதங்கள்படகூடாது என்பதால் தலைகீழாக கைகளால் நடந்து சிவனை அடைந்தார். அப்போது தாயும் தந்தையும் அற்ற சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அம்மையே அன்று அழைத்தாக வரலாறு இந்த வரலாற்று நிகழ்வை உணர்ந்தும் விதமாக மாங்கனி திருவிழா நடக்கிறது.
இத்திருவிழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. நேற்று காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்.இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது. இன்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க மேள தாளம் முழுங்க காலை.9 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து பின் வீடுகளில் மாடிகளில் இருந்து பக்தர்கள் மாங்கனிகளை வீசி ஓம் நமச்சிவாய என்ற கோசங்கள் எழுப்பினர். இங்கு புத்திர பேறு இல்லாதவர்கள் பிச்சாண்டவரையும், காரைக்கால் அம்மையாரையும் வேண்டிவணங்கி சென்றால் புத்திர பாக்கியம் உண்டாகும்.மேலும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு பிறகு வந்து மாங்கனிகளை இரைத்து தங்களின் வேண்டுதலையொட்டி மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன்.எம்.எல்.ஏ.கள் நாஜிம். நாகதியாகராஜன்.கலெக்டர் மணிகண்டன்.சீனியர் எஸ்.பி.மனிஷ் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். மாங்கனி திருவிழாவில் பல்வேறு இடங்களில் 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.