திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் ஆனித் தேரோட்டம் நடந்தது.
நெற்குப்பை சேகரம் பரியாமருதிப்பட்டியில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த சேவுகப்பெருமாள் கோயிலில் ஆனித் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஜூன் 13 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவில் திருவீதி புறப்பாடு நடந்தது. நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 7:00 மணி அளவில் சேவுகப்பெருமாள், அம்மன், விநாயகர் ஆகியோர் தேரில் எழந்தருளினர். தொடர்ந்து கிராமத்தினர் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 4:35 மணி அளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. திரளாக கிராமத்தினர் பங்கேற்று தேரோட்டம் நடந்தது. தாசில்தார் மாணிக்கவாசகம், டி.எஸ்.பி.,ஆத்மநாதன் பங்கேற்றனர்.