பழநி; பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை நடைபெற்றது.
பழநி மலைக்கோயிலில் நேற்று உச்சிகால பூஜைக்கு முன் 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜைக்கு பின் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம், சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் நடந்தது இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேல், ராகவன், கார்த்திகேயன், அசோக்குமார், செந்தில்குமார் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.