Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் பண்ணா ஸ்ரீ ... திண்டிவனம் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா திண்டிவனம் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனத்துாய்மைக்கு ‘வேங்கட கிருஷ்ணன்’ கோவில்
எழுத்தின் அளவு:
மனத்துாய்மைக்கு ‘வேங்கட கிருஷ்ணன்’ கோவில்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2024
04:06

தங்கவயல் மாரிகுப்பம் ஆர்.டி., பிளாக் வட்டத்தில் 113 ஆண்டுகள் பழமையான வேங்கட கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற, நமது பாரம்பரியத்தை விளக்கும் இடமாகவும், ஆன்மிகத்துக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இங்கு 100 வீடுகள் மட்டுமே உள்ளன. இக்கோவிலின் நிறுவனர் ராஜகோபால ஏகாங்கி. கோவிலில் தஞ்சாவூர் ஓவியர் வரைந்த சுவாமி படத்தை வைத்து தான் பூஜைகள் நடத்தி வந்துள்ளனர்.

மணவாள மாமுனி சன்னிதி; மாரிகுப்பம் பகுதியில் உள்ள பல வைணவ பக்தர்கள் இக்கோவிலுக்கு வர துவங்கினர். இக்கோவிலில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம், ஆண்டாளை போற்றி வணங்கும் திருப்பாவை, பக்தி பஜனைகள், ராமாயணம், மகாபாரத கதைகள், பகவத் கீதை பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி, பக்தி மார்க்கத்தை வளர்த்து வந்தனர். இங்கு மணவாள மாமுனி சன்னிதி தனியாக உள்ளது. தனிமனித ஒழுக்கம், கல்வி, பொது அறிவு, வளர்த்து கொள்ளவும் மனத் துாய்மைக்கு தலை சிறந்த இடமாக திகழ்ந்தது. மனநிறைவுக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது. பக்தர்கள் ஒருங்கிணைந்து கோவிலை புதுப்பிக்க, 2009ல் திட்டமிட்டனர். துவஜ ஸ்தம்பம், கருட மண்டபம், பலிபீடம், கருவறையில் ஐந்தரை அடி உயரத்தில் ஸ்ரீ தேவி பூதேவியுடன் பெருமாள் பிரதிஷ்டைசெய்தனர். 2016ல் கோவில் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. மன்னார்குடி செண்டலங்கார செம்பக மன்னார் ஜீயர் மங்கள ஸ்தாபனம் செய்தார்.

பிரம்மோற்சவம்; தை மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ராமநவமி, ராமானுஜர் ஜெயந்தி, ஆடியில் ஸ்தாபன திருமஞ்சனம், ஆண்டாள் திருநட்சத்திரம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, உறியடி உற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், திருவேங்கடமுடையான் அலங்காரம், ஐப்பசியில் மணவாள மாமுனி அவதார அலங்காரம், உற்சவம், மாடவீதி புறப்பாடு, மார்கழியில் 30 நாட்களும் ஆண்டாள் திருப்பாசுரம் ஓதுதல், ஆகியவைகளை நடத்தி வருகின்றனர். தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar