மேட்டுப்பாளையம் பண்ணா ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 04:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் உப்பு பள்ளம் அருகே உள்ள பண்ணா ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஆனி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.