Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி; பிரசன்ன மகாகணபதி ... சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம் சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் கருவறை கூரையில் நீர் கசிவு : தலைமை அர்ச்சகர் வருத்தம்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவில் கருவறை கூரையில் நீர் கசிவு : தலைமை அர்ச்சகர் வருத்தம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
10:06

அயோத்தி : முறையான வடிகால் அமைப்பு செய்யப்படாததால், அயோத்தி ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிகிறது, என, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில், மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுஉள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த ஜன., 22ல் நடந்தது. அதன் பின், தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

வடிகால்; உ.பி.,யில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவதாக, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: ஜன., 22ல் தான் கோவில் திறக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், கோவிலின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 22ல் பெய்த கனமழையின் போது, கோவிலின் கருவறையில் உள்ள மேற்கூரையில் இருந்து அதிகளவு நீர் கசிந்தது. மேலும், பூசாரி அமர்ந்திருக்கும் இடம் மற்றும் வி.ஐ.பி., தரிசனத்துக்கு மக்கள் வரும் இடத்திலும் நீர் கசிகிறது. கோவில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை; முறையான வடிகால் அமைப்பு இல்லை. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதில் தீர்வு காணாவிட்டால், பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்படும். நாட்டின் முன்னணி பொறியாளர்கள் தலைமையில் கட்டப்பட்ட கோவிலில், மேற்கூரையில் இருந்து நீர் கசிவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மறுப்பு; இந்த சம்பவத்தை அடுத்து, ராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, கோவிலுக்கு வந்து மேற்கூரையில் நீர் கசிந்த இடத்தை ஆய்வு செய்தார். பின், செய்தியாளர்களிடம் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், கருவறை மேற்கூரையில் தண்ணீர் கசிந்ததாக வெளியான தகவல் தவறு. மின்சார ஒயருக்காக அமைக்கப்பட்ட குழாய் வழியாக மழை தண்ணீர் கசிந்துள்ளது. இரண்டாவது தள கட்டுமான பணி முடிந்ததும், இந்த பிரச்னை ஏற்படாது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar