பதிவு செய்த நாள்
12
நவ
2012
11:11
க.பரமத்தி: அஷ்ட நாகேஸ்வரி அம்மன் கோவிலில், வீரசூரசெல்லாண்டியம்மன், வேதசனீஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை விழா நடந்தது. க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள சந்தோஷ் நகரில் அஷ்ட நாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த பிரதிஷ் டை விழாவுக்காக, கடந்த, 8ம் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட் டு, புண்யாகம், பஞ்சகவ்யம், கலசபூஜை, வேதபராயணம், அக்னி கார்யம் பூஜைகள் நடந்தது. நவ 10 மங்கள இசையுடன் துவங்கப்பட்டு, சகஸ்ரநாமம், அர்ச்சனை ஹோமம், 108 மூலிகை திரவிய ஹோமம், அஸ்திர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை ஹோமங்கள் நடந்தன. வீரசூரசெல்லாண்டியம்மன், வேதசனீஸ்வரர் சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அபிஷேகங்களை ஈரோடு பாரதி பட்டாச்சாரியார் குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.