பதிவு செய்த நாள்
12
நவ
2012
11:11
குளித்தலை: "லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சுற்றுப்பிரகாரத்துக்கு தளம் அøமக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், லட்சுமிநாராயண பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆண்டுதோறும் பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீப திருவிழா, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் வெகுவிமர்சையாக நடக்கும். இக்கோவிலில் அடிக்கடி திருமணங்கள் நடக்கிறது. இந்நிலையில், கோ வில் சுற்றுப்பிரகாரத்தில் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் சுற்றுபிரகாரம் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு, சுற்றுபிரகாரத்தை சுற்றமுடியாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் இவ்வழியாகதான் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடும் சிரமம் ஏற்படுகிறது. "எனவே அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து, லட்சுமிநாராயண பெருமாள் கோவில் சுற்றுபிரகாரத்ததில் தளம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.