சின்னாளபட்டி; கீழக்கோட்டை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் பெரிய கும்பிடு விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முகூர்த்தக்கால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதல், பால்குடம் ஊர்வலத்துடன் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிருந்தாவன தோப்பில் இருந்து குதிரையில் அழைப்பு, கரக்வலம் நடந்தது. பக்தர்கள், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர். சக்தி சேர்ப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது ஏராளமானோர் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். அனந்த சயன கோலத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. உற்சவர், விசேஷ அலங்காரத்துடன் ஊர்வலம் நடந்தது.