Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளிங்கர் நரசிம்ம சுவாமி ... கழனிவாசல் சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கழனிவாசல் சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
10:07

லண்டன்; பிரிட்டன் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ‘‘ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்; அதுவே என்னை வழிநடத்துகிறது,’’ என்று குறிப்பிட்டார்.


ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டுக்கு, 4ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவருடைய மனைவி அக் ஷதா மூர்த்தி நேற்று முன்தினம் சென்றனர். கோவிலில் பூஜைகள், வழிபாடுகளில் அவர்கள் பங்கேற்றனர். ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் நாராயண மூர்த்தி, சமூக ஆர்வலர் சுதா மூர்த்தியின் மகள் தான், அக் ஷதா மூர்த்தி. பழமைவாத கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹிந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார். கடந்தாண்டு ஜி – 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தபோதும், டில்லியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு தம்பதி சென்று வந்தனர். லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற ரிஷி சுனக், அங்கிருந்த மக்களிடையே பேசியதாவது: நான் ஒரு ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன். என் மத நம்பிக்கையில் உறுதியாக உள்ளேன். அது என் வாழ்க்கையில் எனக்கு உந்துதலாக இருந்து வந்துள்ளது. என் பெற்றோர் எனக்கு ஹிந்து மதத்தின் பெருமைகளை ஊட்டி வளர்த்தனர். பார்லிமென்ட் எம்.பி.,யாக பகவத் கீதையை வைத்து பதவியேற்றேன். என் மதம் மற்றும் நம்பிக்கை, நம் கடமையை செய்யும்படி வலியுறுத்துகிறது. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று கீதை கூறுகிறது. அதுதான், என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். எந்த எதிர்ப்புகள் வந்தாலும், நல்லது செய்வதில் இருந்து விலக மாட்டேன். ஹிந்து தர்மம், பொது வாழ்க்கையில் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளது. இதை, என் மகள்களுக்கும் கற்றுத் தருகிறேன். என் பெற்றோர், என் மாமியார் செய்து வரும் பணிகள் எனக்கு முன்மாதிரியாக உள்ளன. கடந்த சில நாட்களாக, என் மதத்தின் அடிப்படையின் சிலர் விமர்சித்து வருகின்றனர். மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு பெருமை. அதுவே, இந்த நாட்டின் சிறப்புமாகும். இவ்வாறு பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar