பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
04:07
திருக்கோவிலூர்; கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, யாகசாலை பந்தகால் முகூர்த்த விழா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் ஒன்றாகும். பாடல் பெற்ற ஸ்தலம். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி மற்றும் மண்டபங்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்களால் புனரமைக்கப்பட்டு திருப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை யாகசாலை பந்தகால் முகூர்த்தம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஆவாகனம், யாகசாலை பூஜைகள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, முகூர்த்த கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது. நகராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், அறங்காவல் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.