Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2024
01:07

ஏரல்; குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திரு விழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலின் இந்தஆண்டு ஆனி பெருந்திருவிழா வரும்16ம்தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு நேற்று கோயிலில் கால்நாட்டப்பட்டது. மதியம்1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையை தொடர்ந்து ஊர் பெரியவர்கள், பக்தர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது. இதில் சென்னை, கோவை, குரங்கணி வாழ் நாடார் சங்கத்தினர். சுற்றுவட்டார கிராம மக்கள், ஏரல் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குரங்கணி 60 பங்கு நாடார் 

பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர்கலந்து கொண்டனர். 


ஆனிப்பெரும் திருவிழா சிறப்பு பூஜை: ஆனிப் பெருந்திரு விழா நிகழ்ச்சிகள் வரும்14ம்தேதி முதல் ஆரம்பமாகிறது. அன்று காலை நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல்கள், வில்லிசை நடக்கிறது. 15ம்தேதி பட்டிமன்றம், இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 1:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை மற்றும்அதைத் தொடர்ந்து ஸ்ரீநாராயண சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம்தேதி ஆனிப் பெருந்திருவிழா அன்று மதியம் 1:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகளும்அன்று இரவு 1:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ரீ நாராயண சுவாமி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும்14ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் 17ம்தேதி (புதன்கிழமை) இரவு 9 மணி வரை கோயில் நடைதிறந்திருக்கும். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar