திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேக பணிகள்; அறங்காவலர் குழுவினர் ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2024 12:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமாக அறங்காவலர் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், கோயில் துணை கமிஷனர் சுரேஷ் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா கூறியதாவது: கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கும்பாபிஷேக பணிகள் எப்போது துவங்குவது என்பது குறித்தும், கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்கு தடையாக உள்ள லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்துவது, புத்துணர்வு முகாமில் உள்ள இக்கோயில் யானை தெய்வானையை கோயிலுக்கு அழைத்து வருவது சம்பந்தமாக, இங்கிருந்து மருத்துவ குழுவினருடன் சென்று, அங்குள்ள மருத்துவர்கள், நிபுணர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது. சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவது என்பது உள்பட கோயில் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.