பதிவு செய்த நாள்
03
ஜூலை
2024
05:07
சேலம்; காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு பின், 2019 ஜூலை, 1 முதல், அத்திவரதர், 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை நினைவு கூறும்படி, சேலம், பட்டைக்கோவில் அருகே கனக ராஜகணபதி தெருவில் உள்ள ராமர் பஜனை மடத்தில், கடந்த, 1 முதல் நேற்று வரை, அத்தி வரதரை, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘அத்தி’ மரத்தால் செய்யப்பட்ட இவரை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கையால், இன்று நிறைவடைய இருந்த அத்தி வரதர் தரிசனம், ஜூலை, 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை, பக்தர்கள் தரிசிக்கலாம். விபரம் பெற, 88256 08732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.