நத்தம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா; தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2024 06:07
நத்தம், நத்தம் காமராஜ்நகர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி முன்னதாக ஜூன்.13ல் முகூர்த்த கால் நடுதல், ஜூன்.18 அழகர் மலை தீர்த்தம் கொண்டு வந்து காப்புக் கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. ஜூன்.21 அம்மன் குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் நகர்வலம், ஜூன்.30 இரவு அம்மன் குளத்தில் கரகம் ஜோடிக்கப்பட்டு மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அக்கினி சட்டி எடுத்தல், பால்குடம், அழகு குத்தியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கிடாய் வெட்டி அம்மன் பூஞ்சோலை செல்லுதல் மற்றும் மஞ்சள் நீராட்டமும் நடந்தது.