Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய ... கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு; ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு; ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
12:07

திருப்பூர்; திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.


திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:00 மணி முதல், அபிஷேகம் துவங்கியது. மூலவர், அதிகார நந்தி, உமாமகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நந்தியெம்பெருமானுக்கு, தாமரை மாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். ‘ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்’ என்ற பக்தர்கள் கோஷத்துடன், கோவில் வெளிபிரகாரத்தை சுற்றிவந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள், தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்; பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது. 


அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோவில், பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், லட்சுமி நகர் அருணாசலேஸ்வரர் கோவில், எஸ்.வி., காலனி திருநீலகண்டர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar