ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனிசுவாதி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2024 10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு, கோயில் யானை முன் செல்ல கொடி பட்டம் மாடவீதிகள் சுற்றி வந்து வடபத்திரசயனர் சன்னதியில் உள்ள பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பட்டர் கொடிப்பட்டம் ஏற்றினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 11 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. ஜூலை 14ல் செப்புத் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.