தாரகன் உள்ளிட்ட அரக்கர்கள் தேவர்களுக்கு துன்பம் செய்துவிட்டு கடலுக்குள் போய் மறைந்து கொண்டார்கள். இந்திரன் பஞ்சபூத தேவதைகள் மூலம் கடலை வற்றச் செய்து அவர்களைக் கொன்றுவிடலாம் என திட்டமிட்டான். ஆனால், அவர்கள் பயந்து ஒதுங்கி விட்டனர். இந்நிலையில் அகத்தியர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். கடல்நீர் முழுவதையும் குடித்ததும் அசுரர்கள் சிக்கிக்கொண்டனர். தேவர்கள் அவர்களை அழித்தனர். அகத்தியர் கடல்நீர் முழுவதையும் குடித்ததைப் பார்த்த வருணன், வெள்ளை மேகங்களை அனுப்பி ஒட்டுமொத்த கடல்நீரையும் உறிஞ்ச முயற்சித்தான். ஆனால், மேகங்கள் எவ்வளவோ முயன்றும் ஓரளவு தான் பருக முடிந்தது. அவ்வாறு பருகி சில நிமிடங்களிலேயே மழையாகக்கொட்டி மீண்டும் வெள்ளையாகி விட்டது. பெரியவர்கள் சில காரியங்களைச் செய்வது போல, சிறியவர்களும் செய்ய வேண்டுமென நினைத்தால் முடியாது. அவர்களைப் போல் நம்மால் முடியவில்லையே என்று ஏங்கக் கூடாது. உலகில் ஒரு சிலர் தான் அவ்வாறு பிறக்கிறார்கள். அவரவர் சக்திக்கேற்ப வேலை செய்து, இருப்பதைக் கொண்டு வாழ நினைத்தாலே போதும். நிம்மதி கிடைத்து விடும்.