காளஹஸ்தி சிவன் கோயிலில் ஏர்ப்பேடு வியாச பீடாதிபதி பரிப்பூர்ணானந்த கிரி சுவாமிகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 12:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஏர்ப்பேடு வியாச ஆசிரம பீடாதிபதி பரிப்பூர்ணானந்த கிரி சுவாமிகள் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் கோயிலுக்குள் சென்றவர் ஞான பிரசுனாம்பா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமியை சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ மிருத்யுஞ்சய ஸ்வாமி சன்னதியில் தேவஸ்தான அதிகாரி மல்லிகார்ஜுன பிரசாத் சுவாமிக்கு பொன்னாடை (வஸ்திரம்) அணிவித்து, கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினார். கோயில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களுடன் பிரத்தியேகமாக ஆசிர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி மல்லிகார்ஜுன பிரசாத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.