பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
12:07
அவிநாசி; ஆடி வெள்ளியை முன்னிட்டு, மலர் அலங்காரத்தில் காட்டுமாரியம்மன் அருள்பாலித்தார். அவிநாசி அடுத்த ராயம்பாளையத்தில், ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இதில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை, முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், மலர் அலங்காரத்தில் ஸ்ரீ காட்டுமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில், பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, பூ, இனிப்பு, குங்குமம் உட்பட பல பொருட்கள் அடங்கிய சுமங்கலி பிரசாத பாக்கெட், அனைவருக்கும் வழங்கப்பட்டது.