ஆடி முதல் வெள்ளிக்கிழமை; கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 03:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வாரம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் பச்சைப்பட்டு புடவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.கம்பம் ரோடு காளியம்மன் கோயில், தெற்குரதவீதி காளியம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.