சூலூர்; சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி அலங்கார பூஜை நடந்தது.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அலங்கார பூஜை, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் பக்தி பரவசத்துடன் நடந்தது. சூலூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், கணியூர் மாகாளியம்மன் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தரகளுக்கு அம்மன் அருள்பாலித்தார். அனைத்து கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.