ராமேஸ்வரம் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த கொல்கத்தா பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2024 11:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலுக்கு கொல்கத்தா பக்தர்கள் புனித நீர் கலசத்துடன் பாதயாத்திரையாக வந்தனர்.
மேற்குவங்கம் கொல்கத்தா சேர்ந்த சாது பிண்டு மண்டூல் தலைமையில் 32 பேர் ரயிலில் புறப்பட்டு ஜூலை 18ல் மதுரை வந்திறங்கினர். இவர்கள் மதுரையில் உள்ள வைகை ஆற்றில் புனித நீராடி விட்டு 6 கலசத்தில் வைகை நீரை சேகரித்து, அங்கிருந்து பாத யாத்திரை பயணமாக ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். பின் இவர்கள் கோயில் அக்னி தீர்த்த கடல், கோயில் வளாகத்தில் உள்ள 23 தீர்த்தங்களை புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜூலை 24) தனுஷ்கோடி கடலில் புனித நீராடி விட்டு புனித தீர்த்தங்களை சேகரித்து மீண்டும் கொல்கத்தாவுக்கு செல்ல உள்ளனர். ராமர் பூஜித்த வணங்கிய ராமநாதசுவாமியை தரிசிக்கவும், சொந்த ஊருக்கு தீர்த்தங்கள் கொண்டு செல்ல புனித ஆன்மிக பயணமாக வந்தோம் என பிண்டு மண்டூல் தெரிவித்தார்.