பதிவு செய்த நாள்
15
நவ
2012
11:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, வெள்ளி கவசத்தில் சஷ்டி முருகன் அருள்பாலித்தார்.
பரமக்குடி: பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலின், கந்தசஷ்டி உற்சவ விழா, நவ., 13ல், தொடங்கியது. இரவு 8 மணிக்கு காப்புகட்டுதல், தீபாராதனைகள் நடந்தன. நவ., 18ல் சுப்பிரமணிய சுவாமி, மயில் வாகனத்தில் வீதியுலா வந்து, சூரசம்கார லீலையும், நவ., 19 மதியம் 12க்கு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு திருக்கல்யாணம், மாலையில், வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.