Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி ... குறிச்சி அரவான் திருவிழாவிற்கு ஐகோர்ட் கோர்ட் அனுமதி குறிச்சி அரவான் திருவிழாவிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2024
12:07

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா, பூச்சாட்டுடன் துவங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், இக்கோவிலில் ஆடிக் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் குண்டம் விழா, நேற்று முன் தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. காலை, மதியம் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. மாலை அம்மனுக்கு அர்ச்சகருக்கும் காப்பு கட்டப்பட்டது அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் நெல்லித்துறை கிராம மக்களை கோவில் நிர்வாகத்தின் சார்பில் முத்தமிழ் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு அழைத்து வந்தனர் அதன்பிறகு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்டது. இவ்விழாவில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் நெல்லித்துறை கிராம மக்கள் கோவில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற உள்ளது. வருகிற, 26ம் தேதி லட்சார்ச்சனையும், 27ல் கிராம சாந்தியும், 28ல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது. அன்று இரவு சிம்ம வாகனத்தில், அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 29ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் திருவிழாவும் நடைபெற உள்ளது. 31ம் தேதி காலையில் மாவிளக்கும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், ஆகஸ்ட் 1ம் தேதி இரவு பரிவேட்டையும் வானவேடிக்கையும் நடைபெற உள்ளது. இரண்டாம் தேதி மகா அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கும், நான்காம் தேதி ஆடி அமாவாசை பூஜையும் நடைபெறுகிறது. ஐந்தாம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், ஆறாம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மேனகா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar