வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கூமாப்பட்டியில் முத்தாலம்மன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் விழா, நவ. ,7ல் துவங்கியது. தினம் பல்வேறு நிகழ்ச்சியுடன், 7ம் நாள் தேரோட்டம் நடந்தது. அம்மன் தேரில் எழுந்தருள, தேர் ரதவீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் கோயிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடத்தப்பட்டு,கோயிலில் அம்மன் சிலை வைக்கப்பட்டது. பக்தர்கள் பூஜைக்கு பின், கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர். மாவிளக்கு எடுத்தும், ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.