காளஹஸ்தி சுப்ரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா; சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2024 10:08
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான வள்ளி தேவயானை சமேத சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் இன்று புதன்கிழமை காலை வள்ளி தேவயானை சமேத சுப்ரமணிய சுவாமியை (உற்சவ மூர்த்திகளை) ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பல்வேறு மலர்களாலும் தங்க ஆபரணங்களால் பக்தர்கள் கண்கவரும் வகையில் சிறப்பாக அலங்கரித்து தீப தூபங்கள் நெய்வேத்தியம் சமர்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் வள்ளி தேவயானை சமேத சுப்ரமணிய சுவாமியை கிளி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தி யில் உள்ள நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் பக்தர்கள் வழி நெடுகிலும் கற்பூர ஆரத்தி எடுத்து அரோகரா முழக்கத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் மூர்த்தி, துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, உதவி கமிஷனர் மல்லிகார்ஜுன பிரசாத், தேவஸ்தான இணை அலுவலர் லோகேஷ் ரெட்டி, கோயில் கண்காணிப்பாளர் நாகபூஷண யாதவ், கோயில் ஆய்வாளர் சுதர்சன் மற்றும் தேவஸ்தான அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.