பதிவு செய்த நாள்
01
ஆக
2024
11:08
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருகிற 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம்,அன்னம்,கமலம்,குதிரை, யானை, பூப்பல்லக்கு, கிளி,விருஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வீதி உலா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 7ம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.