பதிவு செய்த நாள்
01
ஆக
2024
11:08
சென்னை; வாராஹி அம்மனுக்கு உகந்த மாதம், ‘ஆஷாட’ எனும் அடி மாதம். இதையடுத்து அம்பத்துார், கள்ளிக்குப்பம், கங்கை நகர், யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், மூன்று நாள் தவம் மேற்கொண்டார்.
பின், பரத்வாஜ் சுவாமிகள் கூறியதாவது: ஒரு கையில் கலப்பையும், மற்றொரு கையில் உலக்கையும் வாராஹி வைத்திருக்கிறாள். இதனால், இவருக்கு விவசாய தேவதை என்ற பெயர் உண்டு. மனதை பண்பட்ட நிலமாக உழுது சரிபடுத்த கலப்பையும், நெல்லில் இருந்து உமி பிரிப்பது போல, மனதில் இருந்து அழுக்கை பிரிப்பதாக உலக்கையும் அடையாளம் காட்டுகின்றன. இந்த ஆடி மாதத்தில் வாராஹி அம்மனுக்கு சங்கு புஷ்பம், செம்பருத்தி, செவ்வரளி, செந்தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி போன்ற பூக்களைக் கொண்டு ஆராதித்தால், வேண்டிய வரத்தை அருளுவாள். இவ்வாறு அவர் கூறினார்.