புதுச்சேரி சுகாம்பிகையம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 10:08
புதுச்சேரி; உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஒத்தவாடை வீதியில் அமைந்துள்ள சுகாம்பிகையம்மன் கோவிலில் 96வது ஆடி மாத பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. பிரமோற்சவ விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., பொது குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.