அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் தீர்த்த குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 01:08
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிப்பூர பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. அவிநாசி கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிப்பூர பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.