ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பூர விழா; வெளி ஆண்டாள் சந்நிதியில் சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 01:08
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் ரங்கவிலாசம் மண்டபத்தில்உள் ஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பான ஒன்றாகும். இங்கு நாதமுனிகள் சந்நிதியில் உள்ள ஆண்டாளுக்கு ஆடிமாதம் திரு நட்சத்திரமான பூரம் நாள் அன்று ஆடிப்பூரம் திருவிழாவாக, பத்து நாள்கள் நடைபெறுகிறது. இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஆடிப்பூரம் உற்சவ தினமான இன்று திருமஞ்சனம் முன் சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.