குருதரிசனம் பாவவிமோசனம் என்று மகான்களின் தரிசனத்தைக் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். ஆலயதரிசனத்தில், கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்கிறார்கள். மொத்தத்தில் இவையெல்லாம் நன்மை தரக்கூடியவை என்பதையே இப்படி பலதினுசாகப் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். அவ்வளவே!