சூலூர் வட்டாரத்தில் உள்ள மங்களாம்பிகை கோவில், மேற்கு அங்காளம்மன் கோவில், சூலூர் பெருமாள் கோவில், அத்தனூர் அம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன், கருமத்தம்பட்டி மாரியம்மன், கணியூர் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அம்மன் மற்றும் ஆண்டாள் தாயாருக்கு, பல்வேறு திரவியங்களால் அபிஷேக, அலங்காரம் நடந்தது. பல கோவில்களில், பக்தர்கள் அளித்த வளையல்களை கொண்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அம்மன் குறித்த பாடல்களை பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அலங்கார பூஜைக்கு பின் அலங்கார சொரூபியாக அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வளையல்கள், மஞ்சள், குங்குமம், பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாட்டில் பங்கேற்றனர்.