மொரட்டாண்டி பிரத்தியங்கரா காளி கோவிலில் குடம் குடமாய் மஞ்சள் நீர் அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 04:08
வானுார்; மொரட்டாண்டியில் உள்ள 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கரா காளி கோவிலில் 24ம் ஆண்டு 1008 மஞ்சள் குடம் அபிஷேகம் நடந்தது. வானுார் அடுத்த மொரட்டாண்டியில், 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ மகா பாதாள பிரத்தியங்கரா காளி கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மை வேண்டி ஆடி மாத நான்காம் வெள்ளியை முன்னிட்டு 24ம் ஆண்டு 1008 மஞ்சள் குடம் அபிஷேகம் நடந்தது. முன்னதாக அய்யனார் கோவில் எல்லையில் இருந்து திரளான பக்தர்கள் நீல நிற உடை அணிந்து மஞ்சள் குடம் சுமந்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.