Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: ஏழரையும் சரியில்லே! ... விருச்சிகம்: பணவரவில் தடையில்லை ஒற்றுமைக்கு குறைவில்லை விருச்சிகம்: பணவரவில் தடையில்லை ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
துலாம்: பார்வை ஒன்றே போதும்! பலன்கள் நூறு நடக்கும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 நவ
2012
03:11

நேர்மையாக நடக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே புகழ், ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்யம் - பூர்வ புண்ணிய ஸ்தானங்களில பதிகிறது. ராகு-கேதுவின் அமர்வு சில சிரம பலன்களை தருவதாக இருந்தாலும் பார்வை பலன் சில நல்ல மாற்றங்களை உருவாக்கும். ராசிநாதன் சுக்கிரனுக்கு கட்டுப்பட்ட கிரகமான ராகு புகழ் ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் உங்கள் பேச்சு, எழுத்து, செயல்களின் மூலம் புகழும் தாராள பணவரவும் பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் அனுசரணையுடன் நடந்துகொள்வர். வீடு மாற வேண்டியிருக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.  புத்திரர்கள் பொருட்கள் சில கேட்டு பிடிவாதம் செய்வர். அவர்களைப் பக்குவமாக வழி நடத்துவதால் குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். பூர்வ சொத்துக்களை பராமரிக்க நம்பகமானவர்களை பணியமர்த்துவது  நல்லது.எதிரிகள் உங்களுக்கு எந்தவிதத்திலாவது இடையூறு செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் நடந்துகொள்வர். உடல்நலம் சுமார். ஏழரைச்சனி வேறு படுத்துகிற நேரம் என்பதால் கவனமாக இருக்கவும். குடும்பத்தின் முக்கிய செலவுக்காக நம்பகமானவர்களிடம் கடன் பெறுவீர்கள். தம்பதியர் சிறு விஷயங்களைக்கூட பெரிதாக்கி சண்டை போடும் நிலையுண்டு. விட்டுக்கொடுத்து செல்லவும். வேலைவாய்ப்பு முயற்சிப்பவர்களுக்கு தகுதிக் கேற்ப பணி கிடைக்கும்.

தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி நிலையை சீராக்க கூடுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால், செலவு அதிகரிக்கும். இருப்பினும், கைவிட்டுப் போன ஒப்பந்தங்களின் திடீர் வரவால் பணப்புழக்கத்தை சீராக்கிக் கொள்ளலாம். தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் வேண்டும்.

வியாபாரிகள்: லாபம் குறையும். சரக்கு இருப்பு இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரிப்பதால் அசம்பாவிதம் வராமல் தவிர்க்கலாம். சரக்கு கொள்முதல் செய்ய புது நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்பை ஏற்று தேவைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். சிரமம் இருந்தாலும் தப்பி விடலாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பணவரவு சுமார் என்பதால், குடும்பச்செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அலுவலகத்தில் கடன் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பணியிட மாறுதல் இருக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனமாகப் பணி செய்ய வேண்டும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். செலவில் சிக்கனம் தேவை. குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே ஒற்றுமை, மகிழ்ச்சி குறையாமல் இருக்கும். ஆடை, ஆபரணம் கேட்டு பெறுவதில் நிதான அணுகுமுறை நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு முக்கிய செலவுகளை சரிசெய்யும் அளவுக்கே பணவரவு இருக்கும்.

மாணவர்கள்: அதிக மதிப்பெண் பெறுகிற மாணவர்களின் உதவியால் நன்கு படித்து தரதேர்ச்சியில் சிறந்த இடம்பெறுவர். படிப்புக்கான செலவில் முக்கியமானவற்றை முதலில் செலுத்துவீர்கள். கட்டண பாக்கிகளை கால அவகாசத்தில் கொடுக்க சலுகை கிடைக்கும். வேலைவாய்ப்பு பெறுவதற்கு வெளிவட்டார உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறுவதில் குறுக்கீடு இருக்கும். ஆதரவாளர்களிடம் உங்களை பற்றிய மதிப்பை வளர்க்க அவர்களுக்கு சேவை புரிவது அவசியம். விவகார பேச்சுகளில் சமரசமுயற்சியில் ஈடுபடுபவர்கள் இருதரப்பு நியாயங்களையும் பரிசீலித்து சொல்லாவிட்டால், அரசியல்வாழ்வு பின்தங்கும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு ஓரளவே உதவுவர்.

விவசாயிகள்: விளைச்சல் சுமாராக இருக்கும். பழைய பாக்கி கிடைப்பதால் பணநிலை ஓரளவு கைகொடுக்கும். கால்நடை வளர்ப்பு வருமானம் தரும்.

பரிகாரப் பாடல்:
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால்  நன்மை வளரும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar