Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 )
ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

12 நவ
2026
10:11

கார்த்திகை: முயற்சி வெற்றிதரும்


ஆத்ம காரகனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ராகுவும் கேதுவும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவர்கள். கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு ஜீவன ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். 


இதனால், முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களும் சோர்வும் விலகும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். செய்து வரும் தொழிலில் முயற்சியும் ஆர்வமும் அதிகரிக்கும். 


கேது, கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு தாயாரின் உடல்நிலையில் சங்கடங்களையும், மருத்துவச் செலவுகளையும் ஏற்படுத்துவார். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத நெருக்கடியை உண்டாக்குவார். வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் கவனத்தை செலுத்த முடியாத நிலையினை உருவாக்குவார். 2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய கேதுவாக முன்னேற்றங்களை ஏற்படுத்துவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை வழங்குவார். எடுக்கும் வேலைகளில் லாபத்தை உண்டாக்குவார்.


பொதுப்பலன்

கார்த்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் வாழ்க்கையை வளமாக்குவர். வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். குடும்பத்தில் சுபிட்சத்தை அதிகரிப்பர். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய கேதுவால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சனியும் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் உத்தியோகத்தின் முன்னேற்றம் ஏற்படும். முடங்கிக்கிடந்த தொழில்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிதாக சொத்து சேரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.


தொழில்

கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், கார்த்திகை 2,3,4 ம் பாதத்தினருக்கு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், சகாய கேதுவும் தொடர்ந்து யோகப் பலன்களை வழங்குவர். செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவர். கையிருப்பை அதிகரிப்பர். ஏற்றுமதி இறக்குமதி, இண்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், ஜுவல்லரி, மேன் பவர் ஏஜன்சி, சினிமா, யூட்யூப், சின்னத்திரை தொழில்கள் வளர்ச்சி அடையும். லாபம் தரும்.


பணியாளர்கள்

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் எல்லாம் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு தகுதிக்குரிய பொறுப்பும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.


பெண்கள்

குடும்பம் மற்றும் வேலையில் இருந்த நெருக்கடிகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய நிலை உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வேலையின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணையக்கூடிய நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.


கல்வி

குரு சஞ்சாரமும் பார்வைகளும் படிப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி என்ற கனவை நனவாக்கும். சிலருக்கு மேற்கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடிய நிலை உருவாகும்.


உடல்நிலை

கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் வந்துபோகும் என்றாலும், அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும். 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய கேதுவால் உடல் நிலையில  ஏற்பட்ட சங்கடங்கள், பாதிப்புகள் விலகும். நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.


குடும்பம்

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் குழப்பங்கள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும். நிம்மதியான நிலை இருக்கும்.


பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.


ரோகிணி: முயற்சி வெற்றியாகும்


உங்கள் நட்சத்திராதிபதி சந்திரனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், உங்கள் ராசிக்கு 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழிலில் முன்னேற்றத்தையும் செயல்களில் லாபத்தையும் வழங்கி வந்த ராகு, நவ. 13 முதல் பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்திலும், சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து தாயாரின் உடல்நிலையிலும் உங்கள் ஆரோக்கியத்திலும் சங்கடங்களை வழங்கி வந்த கேது சகாய ஸ்தானமான 3 ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.


பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்கள் உடல் நிலையில் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவார். வியாபாரம் தொழில் வேலை என்று வெளிநாடு வெளியூர் வெளிமாநிலம் செல்லக்கூடிய நிலையினையும், சிலருக்கு அங்கேயே வசித்திடக்கூடிய வாய்ப்பையும் வழங்குவார். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். பெரியோருடைய ஆதரவை கிடைக்க வைப்பார். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்த உண்டாக்குவார். உங்கள் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். மற்றவர்களின் செயல்பாடுகளில் இருந்து உங்கள் செயல்கள் வித்தியாசப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதன் வழியாக உங்கள் நிலை உயரும். இழந்த பொருட்களையும் செல்வாக்கையும் மீட்பீர்கள் என்றாலும், தந்தையின் உடல் நிலையில் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகும் அல்லது, தந்தையுடனான உறவில் இடைவெளி ஏற்படும்.


ஞான மோட்சக்காரகன் கேது 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இதுவரை நீங்கள் பட்ட சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். அதே நேரத்தில் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். வருமானத்தை விட உபரி வருமானமும் அதிக அளவில் ஏற்படும். விவசாயத்தில் முன்னேற்றமும், கால்நடைகளில் வளர்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நவீன பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.


பொதுப்பலன்

பாக்கிய ராகுவும் சகாய கேதுவும், லாப சனியும், குருவின் பார்வைகளும் உங்கள் வாழ்வில் நன்மைகளை ஏற்படுத்தும். எதாகிலும் ஒரு வகையில் நெருக்கடியை சந்தித்து வந்த உங்களுக்கு இனி வரும்காலம் யோகமான காலமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். படிப்பு வேலை திருமணம் சொத்து சுகம் என்ற கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.


தொழில்

தொழில்காரகன் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், கேது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி உண்டாகும். செய்துவரும் தொழில் விரிவடையும். எழுத்து, கம்ப்யூட்டர், தகவல்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, வலைதளம், மினரல் வாட்டர், மோட்டார் சாதனங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், தோல் தொழிற்சாலை, கிரானைட் தொழில்கள் லாபம்தரும்.


பணியாளர்கள்

உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை. வேலை பளுவால் ஓய்விற்கும் நேரமில்லை என்று சங்கடத்துடன் வாழ்ந்து வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நிர்வாகத்தால் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.


பெண்கள்

சகாய கேதுவால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆரோக்கியம் சீராகும். தைரியத்துடன் எந்தவொரு வேலையையும் செய்து அதில் ஆதாயம் காண்பீர்கள். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என்ற அவரவர் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.


கல்வி

படிப்பில் அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு தடைபட்ட கல்வி தொடரும். உயர்கல்வி மாணவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும்.


உடல்நி்லை

ஒரு பக்கம் சகாய கேதுவும், மறு பக்கம் ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சனிப்பார்வை கிடைப்பதும், நோய் நொடிகளில் இருந்து  மீளக்கூடிய நிலையினை உண்டாக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.


குடும்பம்

உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும் வாழ்வில் உங்களுக்கிருந்த கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்தவீடு என்று சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.


பரிகாரம்: கைலாசநாதரை வழிபட மனம் தெளிவடையும். எடுத்த வேலை வெற்றியாகும்.


மிருகசீரிடம்: குறைகள் தீர்ப்பார் குரு


உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கின்ற இடத்திற்கேற்ப பலன்களை வழங்கிட வேண்டியவர்களாகிறார்கள். மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு, ராகு பாக்கிய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.


இதனால், 1,2 ம் பாதத்தினரை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைப்பார் ராகு. செய்துவரும் தொழிலிலும் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, உடல் நிலையிலும் மனநிலையிலும் சங்கடங்களை அதிகரிப்பார். சிலருக்கு மருத்துவச்செலவை ஏற்படுத்துவார். செய்து வரும் தொழிலில் பிரச்னைகளையும், பார்த்துவரும் உத்தியோகத்தில் நெருக்கடிகளையும் உண்டாக்குவார். கேதுவால், மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் சொத்து சேரும். துணிச்சலும் தைரியமும் கூடும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பமும், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும், பொருளாதார நெருக்கடியும், பணவரவில் தடைகளும், வார்த்தைகளால் சங்கடங்களும் உண்டாகும்.


பொதுப்பலன்

மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு, லாப சனியும், சகாய கேதுவும், குருவின் பார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகளை வெற்றியாக்கும். குடும்பம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். படிப்பு வேலை திருமணம் சொத்து சுகம் என்ற தேவைகளை நிறைவேற்றும். தடைபட்ட முயற்சிகளை முடிவிற்கு கொண்டுவரும். 3,4 ம் பாதத்தினருக்கு, குருப் பார்வைகள் நன்மையை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருப்பவர்களின் நிலை உயரும். சங்கடங்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வைக்கும். பெரியோரின் ஆதரவை உண்டாக்கும்.


தொழில்

செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். இதுநாள்வரை கிடைத்த அனுபவங்களைக் கொண்டு செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். குடிநீர், விவசாயம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஜுவல்லரி, மருத்துவம், நோட்டு புத்தகம் காலண்டர் தயாரிப்பு போன்ற தொழில்கள் முன்னேற்றமடையும். அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள் நிலை உயரும். சிலருக்கு புதிய தொழில் அமையும்.


பணியாளர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரிகளிடம் இக்காலத்தில் இணக்கமாக செல்வது அவசியம். இல்லையெனில் அவர்களால் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைபளு கூடும் என்றாலும், அதற்குரிய சலுகைகள் கிடைக்கும்.


பெண்கள்

உடலிலும் மனதிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் என்றாலும், சிலருக்கு அது தொடர் கதையாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். குழந்தைகள் நலனில் இக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிவரும். வேலைப் பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களை வெளியிடாமல் இருப்பதால் கவுரவம் பாதுகாக்கப்படும்.


கல்வி

படிப்பில் தடைகள் நெருக்கடிகள் என்று ஏற்பட்டாலும், குருவின் பார்வைகளால் முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகள் நன்மையளிக்கும்.


உடல்நிலை

பரம்பரை நோய், பருவ நோய் மற்றும் விபத்தின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வயதானவர்கள், மாரக, பாதகாதிபதி தசை நடப்பவர்கள் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கையாக செல்வது நன்மையளிக்கும்.


குடும்பம்

சூழ்நிலையை அறிந்து செயல்படுவதால் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.


பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட உங்களுக்கு வரும் சங்கடங்கள் விலகும்.

பகிர்க copied
 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 ) »
temple news
பராபவ ஆண்டு ஐப்பசி 27 (நவ.13) வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: குறைகள் தீர்ப்பார் குருஉங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: எச்சரிக்கை அவசியம்உங்கள் நட்சத்திராதிபதியான குருவிற்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் ... மேலும்
 
temple news
மகம்: நல்லநேரம் வந்தாச்சுகடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரித்து ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்ததை சாதிப்பீர்கள்உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar