Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 )
மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

12 நவ
2026
10:11

மிருகசீரிடம்: குறைகள் தீர்ப்பார் குரு


உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கின்ற இடத்திற்கேற்ப பலன்களை வழங்கிட வேண்டியவர்களாகிறார்கள். மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு, ராகு பாக்கிய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.


இதனால், 1,2 ம் பாதத்தினரை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைப்பார் ராகு. செய்துவரும் தொழிலிலும் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, உடல் நிலையிலும் மனநிலையிலும் சங்கடங்களை அதிகரிப்பார். சிலருக்கு மருத்துவச்செலவை ஏற்படுத்துவார். செய்து வரும் தொழிலில் பிரச்னைகளையும், பார்த்துவரும் உத்தியோகத்தில் நெருக்கடிகளையும் உண்டாக்குவார். கேதுவால், மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் சொத்து சேரும். துணிச்சலும் தைரியமும் கூடும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பமும், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும், பொருளாதார நெருக்கடியும், பணவரவில் தடைகளும், வார்த்தைகளால் சங்கடங்களும் உண்டாகும்.


பொதுப்பலன்

மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு, லாப சனியும், சகாய கேதுவும், குருவின் பார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகளை வெற்றியாக்கும். குடும்பம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். படிப்பு வேலை திருமணம் சொத்து சுகம் என்ற தேவைகளை நிறைவேற்றும். தடைபட்ட முயற்சிகளை முடிவிற்கு கொண்டுவரும். 3,4 ம் பாதத்தினருக்கு, குருப் பார்வைகள் நன்மையை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருப்பவர்களின் நிலை உயரும். சங்கடங்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வைக்கும். பெரியோரின் ஆதரவை உண்டாக்கும்.


தொழில்

செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். இதுநாள்வரை கிடைத்த அனுபவங்களைக் கொண்டு செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். குடிநீர், விவசாயம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஜுவல்லரி, மருத்துவம், நோட்டு புத்தகம் காலண்டர் தயாரிப்பு போன்ற தொழில்கள் முன்னேற்றமடையும். அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள் நிலை உயரும். சிலருக்கு புதிய தொழில் அமையும்.


பணியாளர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரிகளிடம் இக்காலத்தில் இணக்கமாக செல்வது அவசியம். இல்லையெனில் அவர்களால் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைபளு கூடும் என்றாலும், அதற்குரிய சலுகைகள் கிடைக்கும்.


பெண்கள்

உடலிலும் மனதிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் என்றாலும், சிலருக்கு அது தொடர் கதையாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். குழந்தைகள் நலனில் இக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிவரும். வேலைப் பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களை வெளியிடாமல் இருப்பதால் கவுரவம் பாதுகாக்கப்படும்.


கல்வி

படிப்பில் தடைகள் நெருக்கடிகள் என்று ஏற்பட்டாலும், குருவின் பார்வைகளால் முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகள் நன்மையளிக்கும்.


உடல்நிலை

பரம்பரை நோய், பருவ நோய் மற்றும் விபத்தின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வயதானவர்கள், மாரக, பாதகாதிபதி தசை நடப்பவர்கள் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கையாக செல்வது நன்மையளிக்கும்.


குடும்பம்

சூழ்நிலையை அறிந்து செயல்படுவதால் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.


பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட உங்களுக்கு வரும் சங்கடங்கள் விலகும்.


திருவாதிரை:  எச்சரிக்கை அவசியம்


உங்கள் நட்சத்திராதிபதியாக ராகு இருந்தாலும், கோச்சார ரீதியாக அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவராகிறார். கடந்த ஒன்றரை வருடமாக 9 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் நன்மைகளையும் வழங்கி வந்த ராகு, நவ. 13 முதல் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிவந்த கேது, 2 ம் இடமான தன, குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.


கோச்சார ரீதியாக அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் போது, உடல் நிலையில் சங்கடங்களுக்கு மேல் சங்கடங்களையும், மனக் குழப்பத்தையும், வாழ்க்கையில் நெருக்கடிகளையும், வியாபாரம் தொழிலில் பிரச்சனைகளையும், போராட்டங்களையும், எந்த ஒன்றிலும் முன்னேற்றம் இல்லாத நிலையினையும், எதிர்பாராத இழப்புகளையும் உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும். எவ்வளவுதான் உழைத்தாலும் நல்ல பெயர் என்பது இந்த நேரத்தில் கிடைக்காமல் போகும். அதன் காரணமாக வாழ்க்கையே சிலருக்கு சூனியம் வைத்ததுபோல் இருக்கும். 


தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான 2 ம் இடத்தில் ஞான மோட்சக் காரகன் கேது சஞ்சரிப்பதால், குடும்பத்தில் குழப்பமும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும், நன்றாக நடந்து கொண்டிருந்த வேலைகளில் தடைகளும், மனதில் நெருக்கடியும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உடல் நிலையிலும் ஏதேனும் ஒரு சங்கடம் வந்து கொண்டிருக்கும். வருமானத்தில் தடையும் அதனால் சங்கடங்களும் போராட்டமும் இருக்கும். 


பொதுப்பலன்

மகரத்தில் ராகுவும், கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில்  உங்கள் ராசிக்கு 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம், உடல்நிலை என்று எதாகிலும் ஒரு நெருக்கடி உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்றாலும், உங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குருப் பார்வைகளும், சூரியன் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களிலும், செவ்வாய் 3,6,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களிலும்  உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் நெருக்கடிகள் எல்லாம் மாறும்.


தொழில் 

செய்து வரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். ஆர்வம் கூடும். ஒரு பக்கம் நெருக்கடிகளை சந்தித்தாலும் மறு பக்கம் போராடி வெற்றிபெறுவீர்கள். சிறிதாக தொடங்கப்பட்ட தொழிலும் உங்கள் உழைப்பால் பெரிதாக வளர்ச்சியடையும். எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, ஜுவல்லரி, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


பணியாளர்கள்

வேலைப்பார்க்கும் இடத்தில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மேல் அதிகாரிக்கும் உங்களுக்கும் இணக்கமற்ற நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் சங்கடங்களை சந்திக்க நேரும். மறைமுக எதிரிகளால் நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். உங்களிடம் நல்லவர்போல் பேசிக்கொண்டு உங்களுக்கெதிராக சதி செய்வார்கள் என்பதால் யாரிடமும் உங்கள் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். நிர்வாகம் பற்றி பேசவும் வேண்டாம். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.


பெண்கள்

தங்கள் உடல் நிலையில் மட்டும் அல்லாமல், கணவரின் உடல் நிலையிலும் அக்கறை செலுத்துவது அவசியம். வேலைப்பார்க்கும் இடத்தில் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். இக்காலம், சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பிறரை நம்பி இறங்கும் வேலைகள் இழுபறியாகும் என்பதால் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.


கல்வி

இயல்பாகவே படிப்பில் அக்கறை கொண்ட உங்களுக்கு, இக்காலத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமலும், தவறான நட்புகளை நெருங்க விடாமலும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.


உடல்நிலை

கர்மக்காரகனான சனி பகவானின் மகர வீட்டில், உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும் ராகுவால், உடல் நிலையில் ஏதேனும் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச்செலவும் அதிகரிக்கும் என்றாலும், ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படாது. நரம்புக் கோளாறு, மூச்சுத்திணறல், ஹார்ட் அட்டாக், பரம்பரை நோய், பருவ நோய் போன்ற பாதிப்புகள் சிலருக்கு ஏற்படும். சிலர் விபத்திலும் சிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பயணிப்பது நன்மையளிக்கும்.


குடும்பம்

குடும்ப ஸ்தானமான 2 ம் வீட்டில் ஞான மோட்சக் காரகன் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும் என்பதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும் விட்டுக்கொடுத்து செயல்படுவதும் நன்மையளிக்கும். இக்காலத்தில் பெரியோரின் ஆலோசனைகள் உங்களைப்பாதுகாக்கும். எதிலும் கவனமாக இருப்பதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மைதரும். சுய ஜாதகம் பலம் பெற்றவர்களுக்கும், தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாகனம் வசதி வாய்ப்பு என்ற நிலை உருவாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.


பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட உங்களுக்கு வரும் சங்கடங்கள் விலகும்.


புனர்பூசம்: எச்சரிக்கை அவசியம்


உங்கள் நட்சத்திராதிபதியான குருவிற்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் இல்லை என்றாலும், கோச்சார சஞ்சாரத்தின் போது தாங்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகின்றனர். புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்திலும், கேது 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் நவ. 13 முதல் சஞ்சரிக்க உள்ளனர். 4 ம் பாதத்தினருக்கு ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கப் போகின்றனர்.


இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டம ராகு கஷ்டங்களை அதிகரிப்பார். நெருக்கடியை உண்டாக்குவார். சிலரை இருந்த இடத்தை விட்டு, வசிக்கும் ஊரை விட்டு வேறு இடத்திற்குச் செல்லுகின்ற நிலையையும் உருவாக்குவார். வேலையில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். சிலரை வேலையை விட்டு வெளியேறும் வகையில் சூழலை உருவாக்குவார். எட்டில் பாப கிரகம் இருந்தால் தொட்டவை அனைத்திலும் கேடு என்பது விதி என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கேது 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதும் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வருமானத்தில் தடை உண்டாகும். கடன் தொல்லையால் மனதில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வார்த்தைகளால் பிரச்னைகள் பெரிதாகும்.


4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இதற்கு முன்பு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் என்றாலும், புதிய நண்பர்கள் வழியாக தவறான வழியில் செல்லக்கூடிய நிலை உண்டாகும். சிலர் வாழ்க்கைத்துணையின் வெறுப்பிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். ஜென்ம கேது உங்களுக்குப் படிப்பினைகளை உண்டாக்குவார். உலகையும், உறவுகளையும், நண்பர்களையும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். எதையோ இழந்ததுபோல் மனம் தவிக்கும்.


பொதுப்பலன்

ராகு கேது சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும், குரு பகவானின் பார்வைகளும், 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களும், 3,6,11 ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களும் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உத்தியோகம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தேவைக்கேற்ற பணம்வரும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவானின் சஞ்சார நிலைகள், செய்துவரும் தொழில்மீது அக்கறையை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், பைனான்ஸ், மருத்துவம், கல்வி, பேக்டரி, கம்பெனி, ஹார்டுவேர்ஸ், மெஷினரி, குடிநீர், குளிர்பானம், நகை உருவாக்கம் விற்பனை, ரியல் எஸ்டேட், கெமிக்கல் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் இருப்பவரையும், உங்களுக்கு மேலானவர்களையும் அனுசரித்துச்செல்வது அவசியம். வேலை பளுவின் காரணமாகவும்,  சமாளிக்கும் சக்தியை இழந்து போவதாலும் சிலர் செய்து வரும் வேலையை விட வேண்டிய நிலையும் இருக்கும். நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடனும் தவறுக்கு இடம் கொடுக்காமலும் செயல்படுவது நன்மையளிக்கும்.


பெண்கள்

குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் கலந்தாலோசித்து செயல்படுவதும் அவசியம். உங்கள் உடல் நிலையிலும், கணவரின் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்புகளால் சிலருக்கு சங்கடங்களும் அவமானமும் உண்டாக வாய்ப்பிருப்பதால் கவனமாக பழகுவது அவசியம்.


கல்வி

ஞானக்காரகன் குருவின் அருள்பெற்ற உங்களுக்கு சூழ்நிலைகள் அறிந்து செயல்படக்கூடிய சக்தி இருக்கும். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை

ராகு கேது சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பும் மன நிலையில் குழப்பமும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு மருத்துவச் செலவு கூடும். உணவிலும், சுய ஒழுக்கத்திலும் இக்காலத்தில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். பரம்பரை நோய் பருவ நோய் என்று சிலர் மருத்துவ மனைகளுக்கு சென்று வரக்கூடிய நிலை உண்டாகும்.


குடும்பம்

திட்டமிட்டு செயல்படுவதால் நெருக்கடிகள் நீங்கும் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் அவசியம். பிள்ளைகள் நலனிலும் கவனம் தேவைப்படும். அவர்களின் உயர்கல்வி, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும்.


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 ) »
temple news
பராபவ ஆண்டு ஐப்பசி 27 (நவ.13) வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
கார்த்திகை: முயற்சி வெற்றிதரும்ஆத்ம காரகனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ராகுவும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: எச்சரிக்கை அவசியம்உங்கள் நட்சத்திராதிபதியான குருவிற்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் ... மேலும்
 
temple news
மகம்: நல்லநேரம் வந்தாச்சுகடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரித்து ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்ததை சாதிப்பீர்கள்உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar