Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - ... சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 )
கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

12 நவ
2026
11:11

புனர்பூசம்: எச்சரிக்கை அவசியம்


உங்கள் நட்சத்திராதிபதியான குருவிற்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் இல்லை என்றாலும், கோச்சார சஞ்சாரத்தின் போது தாங்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகின்றனர். புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்திலும், கேது 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் நவ. 13 முதல் சஞ்சரிக்க உள்ளனர். 4 ம் பாதத்தினருக்கு ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கப் போகின்றனர்.


இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டம ராகு கஷ்டங்களை அதிகரிப்பார். நெருக்கடியை உண்டாக்குவார். சிலரை இருந்த இடத்தை விட்டு, வசிக்கும் ஊரை விட்டு வேறு இடத்திற்குச் செல்லுகின்ற நிலையையும் உருவாக்குவார். வேலையில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். சிலரை வேலையை விட்டு வெளியேறும் வகையில் சூழலை உருவாக்குவார். எட்டில் பாப கிரகம் இருந்தால் தொட்டவை அனைத்திலும் கேடு என்பது விதி என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கேது 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதும் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வருமானத்தில் தடை உண்டாகும். கடன் தொல்லையால் மனதில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வார்த்தைகளால் பிரச்னைகள் பெரிதாகும்.


4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இதற்கு முன்பு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் என்றாலும், புதிய நண்பர்கள் வழியாக தவறான வழியில் செல்லக்கூடிய நிலை உண்டாகும். சிலர் வாழ்க்கைத்துணையின் வெறுப்பிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். ஜென்ம கேது உங்களுக்குப் படிப்பினைகளை உண்டாக்குவார். உலகையும், உறவுகளையும், நண்பர்களையும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். எதையோ இழந்ததுபோல் மனம் தவிக்கும்.


பொதுப்பலன்

ராகு கேது சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும், குரு பகவானின் பார்வைகளும், 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களும், 3,6,11 ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களும் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உத்தியோகம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தேவைக்கேற்ற பணம்வரும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவானின் சஞ்சார நிலைகள், செய்துவரும் தொழில்மீது அக்கறையை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், பைனான்ஸ், மருத்துவம், கல்வி, பேக்டரி, கம்பெனி, ஹார்டுவேர்ஸ், மெஷினரி, குடிநீர், குளிர்பானம், நகை உருவாக்கம் விற்பனை, ரியல் எஸ்டேட், கெமிக்கல் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் இருப்பவரையும், உங்களுக்கு மேலானவர்களையும் அனுசரித்துச்செல்வது அவசியம். வேலை பளுவின் காரணமாகவும்,  சமாளிக்கும் சக்தியை இழந்து போவதாலும் சிலர் செய்து வரும் வேலையை விட வேண்டிய நிலையும் இருக்கும். நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடனும் தவறுக்கு இடம் கொடுக்காமலும் செயல்படுவது நன்மையளிக்கும்.


பெண்கள்

குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் கலந்தாலோசித்து செயல்படுவதும் அவசியம். உங்கள் உடல் நிலையிலும், கணவரின் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்புகளால் சிலருக்கு சங்கடங்களும் அவமானமும் உண்டாக வாய்ப்பிருப்பதால் கவனமாக பழகுவது அவசியம்.


கல்வி

ஞானக்காரகன் குருவின் அருள்பெற்ற உங்களுக்கு சூழ்நிலைகள் அறிந்து செயல்படக்கூடிய சக்தி இருக்கும். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை

ராகு கேது சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பும் மன நிலையில் குழப்பமும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு மருத்துவச் செலவு கூடும். உணவிலும், சுய ஒழுக்கத்திலும் இக்காலத்தில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். பரம்பரை நோய் பருவ நோய் என்று சிலர் மருத்துவ மனைகளுக்கு சென்று வரக்கூடிய நிலை உண்டாகும்.


குடும்பம்

திட்டமிட்டு செயல்படுவதால் நெருக்கடிகள் நீங்கும் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் அவசியம். பிள்ளைகள் நலனிலும் கவனம் தேவைப்படும். அவர்களின் உயர்கல்வி, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும்.


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பூசம்: சங்கடம் தீர்ப்பார் சனி


கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களையும் தடைகளையும் உடல் நிலையில் பாதிப்பையும் வழங்கி வந்த ராகு, நவ. 13 முதல் 7 ம் இடமான சப்தம ஸ்தானத்திற்கும், தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது, ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்க உள்ளனர்.


சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், நட்பு ஸ்தானம் என்னும் 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, தவறான நபர்களின் நட்பை ஏற்படுத்துவார். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவை உண்டாக்குவார். சிலருக்கு பிரிவினையையும் வழங்குவார். உறவினர்களிடமும் பகை பிரச்சினை என்ற நிலையை உருவாக்குவார். சிலர் வசிக்கும் ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ வேண்டிய சூழலும் உண்டாகும். மற்றவர்கள் விமர்சனம் செய்யும் அளவிற்கு  உங்கள் போக்கு இருக்கும்.

ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் மனதில் குழப்பமும், நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். உங்களுக்கு யாரோ ஏதோ செய்துவிட்டதுபோல் நினைப்பீர்கள். எடுக்கும் வேலைகளும் இழுபறியாகும். எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும் நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களைவிட்டு விலகிச் செல்வர். உறவுகளிடமும் பகை உருவாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிக்கும் காலம் படிப்பினைகளை அடையும் காலமாக இருக்கும்.


பொதுப்பலன் 

பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானும், குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும், செவ்வாய் சூரியன் சஞ்சார நிலைகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உருவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும், திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள்.


தொழில் 

செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். சந்தை நிலவரம் அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மையாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரரை அனுசரித்துச் செல்வது அவசியம். பணியாளர்களின் ஒத்துழைப்பும் இக்காலத்தில் போதுமான அளவிற்கு கிடைக்காமல் போகும் என்பதால் அனைத்திலும் உங்கள் நேரடி கண்காணிப்பு அவசியம். நகை உற்பத்தி, விற்பனை. நிதி நிறுவனம். கமிஷன் ஏஜென்சி. ரியல் எஸ்டேட். பில்டர். ஏற்றுமதி இறக்குமதி. உணவகம். மருந்து. விவசாயம். கெமிக்கல். இயந்திரத் தொழில் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

தொழில்காரகன் சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். பணி புரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சிலர் தற்போதிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லக்கூடிய நிலை உருவாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள்

ஜென்ம கேது, சப்தம ராகுவின் காலம் வாழ்க்கையை புரட்டிப்போடும் காலம் என்பதால் புதியவர்கள் நட்பில் எச்சரிக்கை அவசியம். எந்த ஒன்றிலும் குடும்பத்தினரையும் கணவரையும் முன்னிறுத்தி செயல்படுவது பாதுகாப்பினை உண்டாக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகளை தன புத்திரக்காரகன் குரு நிறைவேற்றுவார்.


கல்வி

குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். தவறான நட்புகளை விட்டு வெளியில் வருவீர்கள். ஆசிரியர்கள் ஆலோசனை உங்களை மேலும் உயர்த்தும்.


உடல்நிலை

ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது உடல் நிலையில் பயத்தை உண்டாக்கினாலும், பாக்கிய சனியின் பார்வையால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும் சிகிச்சையில் இருந்து வருபவர்களும் ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உருவாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.


குடும்பம்

ஜென்ம கேது வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கினாலும், குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதுடன், பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.


ஆயில்யம்: போராடி வெற்றிபெறுவீர்


வித்யா காரகன் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு, ராகு கேது இருவரும் நட்பானவர்கள் என்றாலும், அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக்  கூடியவர்கள். இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்த நிலையில், நவ 13 முதல் ராகு 7 ம் இடமான களத்திர ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்க உள்ளனர்.


சப்தம ஸ்தானம் என்னும் 7 ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும்போது, கணவன் மனைவியிடையே மனதளவில் இடைவெளி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வகையில் தன் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு திருமணம் நடக்கும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கூட்டாளிகளிடம் இணக்கமற்ற நிலை உண்டாகும். பண விவகாரத்திலும் புதிய ஒப்பந்தங்களில் கூடுதல் கவனம் நன்மையளிக்கும்.  இக்காலத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிப்பதுபோல் ஒரு தோற்றம் உண்டாகும்.

ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது உங்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குவார். இதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைகளிலும் இழுபறி ஏற்படும். தொழிலில் பின்னடைவு, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு, உடன் இருப்போரால் சங்கடம் என்ற நிலைகளால் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வீர்கள். நிம்மதியைத்தேடி ஆலயங்களுக்கு செல்வீர்கள். ஆராய்ச்சித் துறையில் ஆழமாக ஈடுபடுவீர்கள். தனிமையை நேசிப்பீர்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எந்தப்பக்கம் திரும்பினாலும் இந்த நேரத்தில் நிம்மதியற்ற நிலையே இருக்கும். உங்களைச்சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்ளும் காலமாக இக்காலம் இருக்கும்.


பொதுப்பலன் 

குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் இக்காலத்தில் சாதகமாக இருப்பதால், எதிர்வரும் சங்கடங்களை எல்லாம் உங்களால் சமாளிக்க முடியும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வதற்கு சூழ்நிலை சாதகமாகும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் உண்டாகும். தேவைக்கேற்ற பணம் கிடைக்கும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவானும், தனக்காரகன் குருவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால், செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.  எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உருவாகும். எதிர்ப்பு போட்டி பகை என்பதையெல்லாம் வெல்லக்கூடியவர்களாக மாறுவீர்கள். இன்டஸ்ட்ரீஸ், ரியல் எஸ்டேட், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், மினரல் வாட்டர், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், விவசாயம், ஹார்ட்வேர், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலைப்பார்க்கும் இடத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும், வேலைபளு அதிகரித்தாலும், அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும், உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச்செல்வதும் இக்காலத்தில் அவசியம். சிலர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு சம்பளம் சலுகைகளுக்காக வேறு வேலைக்குச் செல்வீர்கள்.


பெண்கள்

ஜென்ம கேதுவால் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். வெவ்வேறு சிந்தனைகளால் மனம் அலைபாயும். சப்தம ராகுவால் தவறான நபர்களை நம்பி குடும்பத்தினரிடம் சிலர் மோதல் போக்கை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையுடனும் சிலருக்கு இடைவெளி ஏற்படும் என்பதால், காலம் நேரம் கருதி குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், கணவரின் பாதுகாப்போடு செயல்படுவதும் அவசியம். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் இக்காலத்தில் நனவாகும்.


கல்வி

வித்தியா காரகனின் அருள் பெற்ற உங்களுக்கு, இயல்பாகவே படிப்பின் மீது அக்கறை இருக்கும். இக்காலத்தில் குரு பகவானின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துவது நன்மையளிக்கும்.


உடல்நிலை

ஜென்ம கேதுவால் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். அலர்ஜி, ஸ்கின் பிராப்ளம், நரம்புத் தளர்ச்சி, ரகசியநோய், செரிமானக் கோளாறுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலருக்கு மருத்துவ பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மருத்துவச்செலவு இருந்து கொண்டே இருக்கும்.


குடும்பம்

ராகு கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் எந்த வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். பாக்கிய சனியும், குருவின் சஞ்சாரமும் உங்களைப் பாதுகாத்திடும் என்பதால் உங்களை நோக்கிவரும் பிரச்னைகள் எல்லாம் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு வாகனம் வசதி வாய்ப்பு என்ற கனவு நனவாகும்.


பரிகாரம்: நரசிம்மரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 ) »
temple news
பராபவ ஆண்டு ஐப்பசி 27 (நவ.13) வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
கார்த்திகை: முயற்சி வெற்றிதரும்ஆத்ம காரகனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ராகுவும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: குறைகள் தீர்ப்பார் குருஉங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 
temple news
மகம்: நல்லநேரம் வந்தாச்சுகடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரித்து ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்ததை சாதிப்பீர்கள்உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar