Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 )
சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

12 நவ
2026
11:11

மகம்: நல்லநேரம் வந்தாச்சு


கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரித்து உடன் இருந்தவர்களால் நெருக்கடிகளையும், சங்கடங்களையும் அவமானங்களையும் வழங்கி வந்த ராகு, நவ. 13 முதல் உங்கள் ராசிக்கு 6 ம் இடத்திலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை போராட்ட மயமாக்கி வந்த கேது 12 ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.


சத்ரு ஜெய ஸ்தானம் என்னும் 6 ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் காலத்தை யோக காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த சங்கடங்கள் எல்லாம் இனி இல்லாமல் போகும். உடலில் ஏற்பட்ட நோய்கள் விலகும். எதிர்ப்பு பகை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிரிகளை வெல்லக்கூடிய நிலை உண்டாகும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். செய்துவரும் தொழிலில் போராட்டங்களை சந்தித்து வருபவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும் மேல் அதிகாரியின் ஆதரவு ஏற்படும். 12 ம் இடமான, அயன சயன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது மனக்குழப்பத்தை உண்டாக்குவார். சின்னச்சின்ன விஷயத்திற்கும் பயத்தை ஏற்படுத்துவார். உறவினர் வகையில் தொல்லைகளையும் அதனால் கவலைகளையும் உண்டாக்குவார். திட்டமிடுவது ஒன்றாக இருக்கும்  நடப்பதை வேறாக மாற்றுவார். உடலில் ஏதாவது ஒரு நோயை உண்டாக்கி மனதை வேதனைப்படுத்துவார் என்றாலும், ஜென்ம கேதுவாக சஞ்சரித்து கடந்த காலத்தில் உண்டாக்கிய நெருக்கடிகளை இப்போது இல்லாமல் செய்வார். அனைத்திலும் அக்கறையையும் முயற்சியையும் அதிகரிப்பார். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை மனதில் உண்டாக்குவார்.


பொதுப்பலன்

ஜென்ம ராசியை விட்டு கேதுவும், 7 ம் இடத்தில் இருந்து ராகுவும் விலகுவது உங்களுக்கு மிகப்பெரிய யோகமாகும். பெரிய கண்டத்தில் இருந்து விடுபட்டதுபோல் உங்கள் நிலைமாறும். ஆறாம் இட ராகு உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். அரியணையில் ஏற்றுவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவார். ஆரோக்கியமுடன் செயல்பட வைப்பார். குடும்பம் தொழில் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.


தொழில்

6 ம் இட ராகுவும், குருவின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல், கால்நடை வளர்ப்பு, தொழிற்சாலை கள், மருத்துவம், எக்ஸ்போர்ட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், திரைப்படம், சின்னத்திரை, அழகு சாதனங்கள், ரெடிமேட் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

இதுவரை சந்தித்துவந்த நெருக்கடிகள் விலகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.


பெண்கள்

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அந்நியரால் ஏற்பட்ட தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவரின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


கல்வி

ஜென்ம ராசியை விட்டு கேது விலகி இருப்பதால் படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும் படிப்பில் அக்கறை கூடும்.


உடல்நிலை

ஆயுள்காரகன் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், யோகக்காரகன் ராகு 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடலில் ஏற்பட்ட நோய்கள் விலகும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த நோய்களும் குணமாகும்.


குடும்பம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் விலகும். தன் குடும்பம் தன் மக்கள் என்ற நிலைக்கு வருவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: துர்க்கையை வழிபட உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் விலகும்.


பூரம்: எடுத்த முயற்சியில் வெற்றி


அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு, ராகு கேது இருவருமே நட்பானவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இடத்தில் சஞ்சரிக்கிறார்களோ அந்த இடத்திற்குரிய  பலன்களை வழங்கிடக் கூடியவர்கள். அந்த நிலையில் சப்தம ஸ்தானம் என்னும் 7 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை போர்க்களமாக மாற்றிய ராகுவும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வாழ்க்கையே சூனியமானது போன்ற நிலையினை உண்டாக்கிய கேதுவும் நவ. 13 முதல் அங்கிருந்து பெயர்ச்சியாகின்றனர். ராகு 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது 12 ம் இடமான விரய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். 


ராகு, உப ஜெய ஸ்தானமான 6 ம் இடத்தில் சஞ்சரிக்கின்ற காலம் மிக யோகமான காலமாகும். இக்காலத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி உண்டாகும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி ஏற்படும். வழக்கு விவகாரங்கள  சாதகமாகும். கடன் தொல்லை விலகும். ஆரோக்கியம் சீராகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வும் தேடி வரும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். பண வரவு அதிகரிக்கும். திடீர் யோகம் உண்டாகும். விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு பயணம் ஏற்படும். ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். சுப விரயம் ஏற்படும். தேவையில்லாத வீண் செலவுகள் குறையும். கையிருப்பை தானம் தர்மம் என்று செலவிட்டு ஆத்ம திருப்தி அடைவீர்கள்.


பொதுப்பலன்

இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம் மற்றும் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். செல்வாக்கு கௌரவம் அந்தஸ்து உயரும். சிலருக்கு இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும்.


தொழில்

சத்துரு ஜெய ஸ்தான ராகுவும், குருவின் பார்வைகளும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். போட்டி, தடை, பிரச்னைகளை விலக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பேன்சி ஸ்டோர், ஜூவல்லரி, அழகு சாதனங்கள், வாகன விற்பனை,  கவரிங், சினிமா, தொலைக்காட்சி, யூட்யூப், ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகத்திடம் நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். நிலுவையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். வரவேண்டிய பணமும் கிடைக்க வேண்டிய சலுகைகளும் கிடைக்கும்.


பெண்கள்

போராட்டமும் சங்கடமுமாக இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். கணவனுடன் இணக்கமான நிலை ஏற்படும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற அவரவர் கனவு நனவாகும்.


கல்வி

தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். ஆசிரியரின் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.


உடல்நிலை

ஆறாமிட ராகுவால் ஆரோக்கியம் மேம்படும். பாரம்பரிய நோய், பரம்பரை நோய் என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். விபத்தால் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டவர்களுக்கும் ஆரோக்கியமான நிலை உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.


குடும்பம்

குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் போராட்ட நிலை யாவும் மாறும். இதுவரை உங்களுக்கு கிடைத்த படிப்பினைகளை வைத்து எதிர்காலத்தை எப்படி கொண்டு செல்வது என்ற வழி தெரியும். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். தேவையான பணம் வந்து கொண்டிருக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். 


பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட நன்மை அதிகரிக்கும்.


உத்திரம்: நினைத்ததை சாதிப்பீர்கள்


உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவர்களாகிறார்கள். உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சத்துரு ஜெய ஸ்தானத்திலும், 2,3,4 ம்  பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானமான 12 ம் இடத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானமான 11 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்.


உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகக்காரகன் ராகுவால் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். எடுக்கும் வேலையெல்லாம் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், வேலை என்று அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த எதிர்ப்பும் தடையும் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல் நிலை சீராகும். ஆரோக்கியம் மேம்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு பூர்வீக சொத்திலும் பிள்ளைகளாலும் பிரச்னைகள் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மனதில் தோன்றி சங்கடத்திற்கு ஆளாக்கும். குடும்பத்திலும் குழப்பம் அதிகரிக்கும். உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, செலவை அதிகரிப்பார். தேவையற்ற அலைச்சலை உண்டாக்குவார். ஒரு பக்கம் வருமானம் வந்தாலும் மறு பக்கம் செலவை ஏற்படுத்துவார். உடல் நிலையிலும் ஏதேனும் பாதிப்பினை உருவாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, வருமானத்தை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


பொதுப்பலன்

உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு யோகக்காரகன் ராகுவால் எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகள் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். இதுவரை இருந்த போராட்டநிலை இருந்த இடம் தெரியாமல் போகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றமான பலன்களை வழங்குவார். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.  வாழ்வில் புதிய பாதை தெரியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சிகள் வெற்றிதரும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவானின் சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், 1 ம் பாதத்தினருக்கு ராகுவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதுடன், குருவின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால், செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம், டிரேடிங், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட், வாகன விற்பனை, ஆடை ஆபரணம், பேன்சி ஸ்டோர், ஜுவல்லரி, அழகு சாதனம், சினிமா, தொலைக்காட்சி, யூடியூப், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், கல்விக்கூடங்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு இக்காலத்தில் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


பெண்கள்

உடலிலும் மனதிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற அவரவர் கனவுகள் நனவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவரின் ஆதரவு கிடைக்கும்.


கல்வி

இயல்பாகவே படிப்பில் அக்கறை கொண்ட உங்களுக்கு, இக்காலத்தில் படிப்பில் ஆர்வம் கூடும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்கள்.


உடல்நிலை

உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு, ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்தை விட்டு கேது விலகுவதால் மருத்துவச் செலவுகள் குறையும். இதுவரை அச்சத்தை உண்டாக்கி வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.


குடும்பம்

மகர ராகு, கடக கேதுவின் காலம் உங்களுக்கு யோகமான காலமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். வருமானம் திருப்பித்தரும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: அபிராமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 ) »
temple news
பராபவ ஆண்டு ஐப்பசி 27 (நவ.13) வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
கார்த்திகை: முயற்சி வெற்றிதரும்ஆத்ம காரகனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ராகுவும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: குறைகள் தீர்ப்பார் குருஉங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: எச்சரிக்கை அவசியம்உங்கள் நட்சத்திராதிபதியான குருவிற்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்ததை சாதிப்பீர்கள்உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar