திருச்செந்துாரில் ஆடி சுவாதி விழாவில் வெள்ளை யானை வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 07:08
திருச்செந்துார்: ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை ) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூரும் வகையில், கோவில் யானையின் உடல் முழுவதும் திருநீறு புசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கசப்பரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும் உலா வந்தனர். தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள் பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடர்ந்து தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.