சிறுபாலை வாழ வந்தாள் அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2024 04:08
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள சிறுபாலை கிராமத்தில் வாழ வந்தாள் அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதனை தொடர்ந்து தினந்தோறும் ஏராளமானோர் கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டு வந்தனர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று வந்தன நேற்று முன்தினம் முளைப்பாரி ஓடுகளை ஏராளமானோர் தலையில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து நீர்நிலையில் கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறுபாலை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*மானாமதுரை பர்மா காலனி மற்றும் மறவர் தெருக்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக விரதமிருந்து வந்த பக்தர்கள் நேற்று முன்தினம் முளைப்பாரி ஓடுகளை ஊர்வலமாக தூக்கிச் சென்று வைகை ஆற்றிலும்,தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்திலும் கரைத்தனர்.