பதிவு செய்த நாள்
16
ஆக
2024
02:08
திருநெல்வேலி; நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி கடைசி வெள்ளி, வரலட்சுமி விரதத்தையொட்டி 1008 சுமங்கலி பூஜை நடந்தது.
ஆடி வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு சிறப்பு வாய்ந்தாகும். மேலும் ஆடி வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, தங்களுடைய கணவர் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டி பெண்கள், சுமங்கலி பூஜை நடத்துவது வழக்கம். இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி 1,008 பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தினர். காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் வரலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட மங்கள பொருட்கள் படைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.