பதிவு செய்த நாள்
16
ஆக
2024
03:08
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று மணமான பெண்கள் இருக்கும் விரதம் வரலட்சுமி விரதம். இந்நாளில் மாக்கோலமிட்டு, மகாலட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவது சிறப்பு. இதனால் மஞ்சள், குங்குமத்துடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
நைவேதயம்: வரலட்சுமிக்கு நைவேத்யமாக பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை. இவற்றில் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.
மந்திரக் கயிறு : வரலட்சுமி விரத பூஜையின் முடிவில் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி விட வேண்டும். கட்டும் போது, ‘‘நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமன்விதம் பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே’’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இதை சொல்ல முடியாதவர்கள், ‘‘நாராயணரின் மனைவியான மகாலட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிறை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு அருள்புரிய வேண்டும்’’ என வழிபட வேண்டும்.