Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி மாத பிறப்பு; கரி வரதராஜ பெருமாள் ... சதுரகிரியில் கனமழையால் தரிசனத்திற்கு அனுமதி இல்லை; வனத்துறை கேட் முன் குவிந்த பக்தர்கள் சதுரகிரியில் கனமழையால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய்யபிஷேகம் துவக்கம்.. பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆவணி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய்யபிஷேகம் துவக்கம்.. பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

17 ஆக
2024
10:08

சபரிமலை: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. தந்திரி பொறுப்புகளை மூத்த தந்திரி ராஜீவரருவின் மகன் பிரம்மதத்தன் மேற்கொண்டார்.


நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் 18 படிகள் வழியாக வந்து தரிசனம் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 10:00 மணி-க்கு நடை அடைக்கப்பட்டது. சுழற்சி முறையில் தந்திரி பொறுப்பை கவனிக்கும் தாழமண் குடும்பத்தில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரருவின் மகன் பிரம்மதத்தன் நேற்று தந்திரி பொறுப்புகளை மேற்கொண்டார்.


இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கணபதி ஹோமம் நடக்கும். காலையில் உஷ பூஜை, மதியம் உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் தொடர்ந்து இரவு படி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடக்கும். எல்லா நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு, 7:00 -மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜையும் நடக்கும். ஆக., 21 வரை பூஜைகள் நடந்து அன்றிரவு நடை அடைக்கப்படும். ஆவணி மாதம் கேரளாவில் மலையாள ஆண்டு பிறப்பு என்பதால் நேற்று அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இன்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar